எனக்கு பசித்த போது நீ உணவைத் தந்தாய்
உன் நிலத்தில் நான் மரத்தைக் கூட நடவில்லை
என் உயிரைக் காக்க நீ மருத்துவரை தந்தாய் மும்பையில்
உன் ரத்தம் சிந்திய போது நான் உன்னிடம் இல்லை
பேசுவதற்கு பொன் மொழியான தமிழை தந்தாய்
நான் அதன் கொள்ளுப் பேரனான ஆங்கிலம் கற்றேன்
நீ அடிமை பட்ட போது நான் பிறக்கவில்லை
நான் பிறந்த பின்பு உன்னை காக்கவில்லை
எனக்கு உத்தியோகத்தைக் கொடுத்தாய் நானோ
அதை விட்டு அன்னியநாட்டுக்குப் பறந்தேன்
நீ எனக்கு என்ன செய்தாய் என்று கேட்டுத் திரிந்தேன்
கென்னெடியின் வரிகளை படிக்க வைத்து மன்னிப்பு கேட்க்கவைத்தாய்
என் பெயரை உன்னிடமிருந்து பெற்றுக் கொண்டேன் ஆனால்
உன் புகழை பரப்ப என்னால் முடியவில்லை
வேண்டியவற்றை அனைத்தையும் குடுத்தாய் உனக்கு
கொடுக்க என்னிடம் ஒன்றும் இல்லை
கொடுக்க ஒன்றும் இல்லாத போதும் வந்தே மாதரம்
என்று சொல்லி தலை வணங்குகிறேன்.
ஜெய் ஹிந்த்!!!!